Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the ESV. Switch to the ESV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 1:1-2:17

ஆதாம் முதல் நோவா வரையுள்ள குடும்ப வரலாறு

ஆதாம், சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேத், ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா.

சேம், காம், யாப்பேத் ஆகியோர் நோவாவின் மகன்கள்.

யாப்பேத்தின் சந்ததியினர்

கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் ஆகியோர் யாப்பேத்தின் மகன்கள்.

அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா, ஆகியோர் கோமரின் மகன்கள்.

எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் யாவானின் மகன்கள்.

காமின் சந்ததியினர்

கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் ஆகியோர் காமின் மகன்களாவார்கள்.

சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா ஆகியோர் கூஷின் மகன்களாவார்கள். சேபா, திதான், ஆகியோர் ராமாவின் மகன்களாவார்கள்.

10 நிம்ரோதின் சந்ததியான கூஷ், வளர்ந்து பலமுள்ள தைரியமிக்க வீரனாக உலகில் விளங்கினான்.

11 லுதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர் ஆகியோரின் தந்தை மிஸ்ராயிம் (எகிப்து) 12 மேலும் மிஸ்ராயும் பத்ரூசியர், கஸ்லூகியர் கப்தோரியர் ஆகியோருக்கும் தந்தை (பெலிஸ்தியர்கள் கஸ்லூகியரிலிருந்து வந்தவர்கள்.)

13 கானான் சீதோனின் தந்தை ஆவான். சீதோன் இவனது மூத்த மகன். கானான் சீதோனுக்கும் கேத்துக்கும் தந்தை ஆவான். 14 அவன் எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும் 15 ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும், 16 அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

சேமின் சந்ததியினர்

17 ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் ஆகியோர் சேமின் மகன்களாவார்கள்.

18 அர்பக்சாத் சாலாவின் தந்தை. சாலா ஏபேரின் தந்தை.

19 ஏபேருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒரு மகனின் பெயர், பேலேகு ஆகும். ஏனென்றால், இவனது வாழ்நாளில் தான் பூமியிலுள்ள ஜனங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டனர். பேலேகின் சகோதரனது பெயர் யொக்தான் ஆகும். 20 அல்மோதாத், சாலேப், ஆசர்மாவேத், யேராகை, 21 அதோராம், ஊசால், திக்லா, 22 ஏபால், அபிமாவேல், சேபா, 23 ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரை யொக்தான் பெற்றான். கீழ்க்கண்ட அனைவரும் யோக்தானின் மகன்களாவார்கள்.

24 சேம், அர்பக்சாத், சாலா, 25 ஏபேர், பேலேகு, ரெகூ, 26 செரூகு, நாகோர், தேராகு, 27 ஆபிராமாகிய ஆபிரகாம் ஆகியோர்.

ஆபிரகாமின் குடும்பம்

28 ஈசாக்கும், இஸ்மவேலும் ஆபிரகாமின் மகன்களாவார்கள். 29 கீழ்க்கண்டவர்கள் இவர்களது சந்ததியாவார்கள்:

இஸ்மவேலின் மூத்த மகனான நெபாயோத், மற்ற மகன்களான கேதார், அத்பியேல், மிப்சாம், 30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, 31 யெத்தூர், நாபீஸ், கேத்மா, ஆகியோர்.

32 கேத்தூராள் ஆபிரகாமின் பெண் வேலைக்காரி. சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா ஆகியோர் இவளது பிள்ளைகள். சேபாவும் தேதானும் யக்ஷானின் பிள்ளைகள்.

33 ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா ஆகியோர் மீதியானின் மகன்கள். இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் சந்ததியார்.

Isaac’s Descendants சாராளின் மகன்கள்

34 ஆபிரகாம் ஈசாக்கின் தந்தை. ஏசாவும், இஸ்ரவேலும் ஈசாக்கின் மகன்கள்.

35 எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு ஆகியோர் ஏசாவின் மகன்கள்.

36 தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு ஆகியோர் எலீப்பாசின் மகன்கள்.

37 நகாத், சேராகு, சம்மா, மீசா ஆகியோர் ரெகுவேலின் மகன்கள்.

சேயீரிடமிருந்து ஏதோமியர்கள்

38 லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் ஆகியோர் சேயீரின் மகன்கள்.

39 ஓரியும், ஓமாமும் லோத்தானின் மகன்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி ஆவாள்.

40 அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் ஆகியோர் சோபாலின் மகன்கள். அயாவும், ஆனாகும் சிபியோனின் மகன்கள்.

41 ஆனாகின் மகன்களில் திஷோனும் ஒருவன். அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் ஆகியோர் திஷோனின் மகன்கள்.

42 பில்கான், சகவான், யாக்கான் ஆகியோர் ஏத்சேரின் மகன்கள்.

ஊத்ஸ், அரான் ஆகியோர் திஷானின் மகன்கள்.

ஏதோமின் அரசர்கள்

43 இஸ்ரவேல் ஜனங்களை அரசனொருவன் ஆள்வதற்கு முன்பே ஏதோம் நிலத்தை பல அரசர்கள் ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களின் பெயர்கள்:

பேயோரின் மகன் பேலா. இவனது நகரத்தின் பெயர் தின்காபா ஆகும்.

44 பேலா மரித்ததும் போஸ்ராவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் இவனுக்குப் பதில் அரசன் ஆனான்.

45 யோபாப் மரித்ததும், தேமானியரின் நாட்டானாகிய ஊசாம் புதிய அரசன் ஆனான்.

46 ஊசாம் மரித்த பின், பேதாதின் மகன் ஆதாத் அவனுக்குப் பதில் அரசன் ஆனான். இவன் மீதீயானியரை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தான். இவனது நகரத்தின் பெயர் ஆவீத் ஆகும்.

47 ஆதாத் மரித்த பின், மஸ்ரேக்கா ஊரைச் சேர்ந்த சம்லா அவனுக்குப் பதில் அரசன் ஆனான்.

48 சம்லா மரித்த பின் சவுல் புதிய அரசன் ஆனான். இவன் ஐபிராத்து ஆற்றின் கரையில் உள்ள ரேகோபோத்தைச் சேர்ந்தவன்.

49 சவுல் மரித்த பின், அக்போரின் மகனான பாகாலானான் அவனுக்குப் பதில் அரசன் ஆனான்.

50 பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவனுக்குப் பின் புதிய அரசன் ஆனான். இவனது நகரத்திற்கு பாகி என்று பெயரிடப்பட்டது. ஆதாத்தின் மனைவியின் பெயர் மெகேதபேல் ஆகும். மாத்திரேத்தின் மகள் மெகேதபேல் ஆவாள். மேசகாபின் மகள் மாத்திரேத் ஆவாள். பிறகு, ஆதாத் மரித்தான். 51 ஆதாத் மரித்தபின், ஏதோமில் திம்னா, அல்யா, எதேத். 52 அகோலிபாமா, ஏலா, பினோன், 53 கேனாஸ், தேமான், மிப்சார், 54 மக்தியேல், ஈராம் ஆகியோர் ஏதோமின் தலைவர்கள் ஆனார்கள்.

இஸ்ரவேலின் மகன்கள்

ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் ஆகியோர் இஸ்ரவேலின் மகன்களாவார்கள்.

யூதாவின் மகன்கள்

ஏர், ஓனான், சேலா ஆகியோர் யூதாவின் மகன்கள். இந்த மூன்றுபேரும் பத்சூவா பெற்ற பிள்ளைகள். இவள் கானான் நாட்டுப் பெண். யூதாவின் முதல் மகனான ஏர், கெட்டவனாக இருப்பதைக் கர்த்தர் கண்டார். அதனால் கர்த்தர் அவனை கொன்றுவிட்டார். யூதாவின் மருமகளான தாமார் அவனுக்குப் பாரேஸ், சேரா எனும் இருவரைப் பெற்றாள். ஆக யூதாவுக்கு 5 மகன்கள் இருந்தார்கள்.

எஸ்ரோனும் ஆமூலும், பாரேசின் மகன்களாவார்கள். சேராவுக்கு 5 மகன்கள். சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா ஆகியோர் ஆவார்கள்.

சிம்ரியின் மகன் கர்மீ. கர்மீயின் மகன் ஆகார். ஆகார் இஸ்ரவேலுக்குப் பல தொல்லைகளை வரவழைத்தவன். இவன் போரில் சில பொருட்களை எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் தேவனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

அசரியா ஏத்தானின் மகன்.

யெர்மெயேல், ராம், கெலுபா ஆகியோர் எஸ்ரோனின் பிள்ளைகள்.

ராமின் சந்ததியினர்

10 ராம், அம்மினதாபின் தந்தை ஆவார். அம்மினதாப், நகசோனின் தந்தை ஆவார். நகசோன், யூத ஜனங்களின் பிரபு. 11 நகசோன் சல்மாவின் தந்தை. சல்மா போவாசின் தந்தை. 12 போவாஸ் ஓபேதின் தந்தை. ஓபேத் ஈசாயின் தந்தை. 13 ஈசாய் எலியாபின் தந்தை. இவன் அவனது மூத்த மகன். இவனது இரண்டாவது மகன் அபினதாப். இவனது மூன்றாவது மகன் சிம்மா. 14 இவனது நான்காவது மகன் நெதனெயேல், இவனது ஐந்தாவது மகன் ரதாயி. 15 இவனது ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது. 16 செருயாளும் அபிகாயிலும் இவர்களது சகோதரிகள். செருயாளிற்கு அபிசாய், யோவாப், ஆசகேல் என மூன்று மகன்கள். 17 அபிகாயில் அமாசாவின் தாய், இஸ்மவேலனாகிய யெத்தேர் அமாசாவின் தந்தை.

அப்போஸ்தலர் 23:11-35

11 மறுநாள் இரவு கர்த்தர் பவுலின் அருகே வந்து நின்றார். அவர், “தைரியமாக இரு. என்னைக் குறித்து எருசலேமின் மக்களுக்கு நீ கூறியிருக்கிறாய். நீ ரோமுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு என்னைக் குறித்துச் சொல்லவேண்டும்” என்றார்.

பவுலைக் கொல்ல சில யூதர்களின் திட்டம்

12 மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்துகொண்டனர். 13 நாற்பது யூதர்களுக்கு மேலாக இச்சதித்திட்டத்தை வகுத்தனர். 14 இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், “நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்! 15 எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.

16 பவுலின் சகோதரியின் மகன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான். 17 அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, “இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்” என்றான். 18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் மகனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி “பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம்” என்றான்.

19 அதிகாரி இளைஞனைக் கையைப் பிடித்து தனித்த ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். அவன் இளைஞனை நோக்கி, “நீ என்னிடம் என்ன கூற விரும்புகிறாய்?” என்று கேட்டான்.

20 இளைஞன், “பவுலை நாளையச் சங்கக் கூட்டத்திற்கு அழைத்து வரும்படியாக உங்களைக் கேட்பதற்கு யூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் பவுலிடம் சில விளக்கங்களைக் கேட்கவிருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டுமென விரும்புகின்றனர். 21 ஆனால் அவர்களை நம்பாதீர்கள் 40 பேருக்கும் மேலான யூதர்கள் ஒளிந்திருந்து பவுலைக் கொல்லக் காத்திருப்பர். அவனைக் கொல்லும் வரைக்கும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று அவர்கள் சபதமிட்டுள்ளனர். உங்கள் சம்மதத்திற்காக இப்போது அவர்கள் தயாராகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றான்.

22 அதிகாரி இளைஞனை அனுப்பிவிட்டான். அதிகாரி அவனை நோக்கி, “அவர்கள் திட்டத்தை எனக்குக் கூறியதாக யாரிடமும் சொல்லாதே” என்றான்.

செசரியாவிற்குப் பவுல் அனுப்பப்படுதல்

23 பின்பு அதிகாரி இரண்டு படை அதிகாரிகளை அழைத்தான். அவன் அவர்களை நோக்கி, “செசரியாவுக்குப் போவதற்குச் சில மனிதர்கள் வேண்டும். இருநூறு படை வீரர்களை ஆயத்தப்படுத்துங்கள். எழுபது குதிரை வீரர்களையும் இருநூறு ஈட்டியேந்திய வீரர்களையும் தயார்படுத்துங்கள். இன்றிரவு ஒன்பது மணிக்குப் புறப்படத் தயாராக இருங்கள். 24 பவுல் சவாரி செய்வதற்கும் சில குதிரைகளைப் பெறுங்கள். ஆளுநர் பெலிக்ஸிடம் அவன் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும்” என்றான். 25 அதிகாரி ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தின் விபரம் வருமாறு.

26 கிளாடியஸ் லைசியஸிடமிருந்து மிக மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்ஸ் அவர்களுக்கு,

வாழ்த்துக்கள்.

27 யூதர்கள் இம்மனிதனைக் கைப்பற்றி அவனைக் கொல்வதற்கு இருந்தார்கள். அவன் ஒரு ரோமக் குடிமகன் என்பதை நான் அறிந்தேன். எனவே நான் எனது வீரரோடு சென்று அவனைக் காப்பாற்றினேன். 28 அவர்கள் ஏன் அவனைப் பழிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். 29 எனவே யூத சங்கத்திற்கு முன்னால் அவனைக் கொண்டு வந்தேன். இதுவே நான் கண்டது. தவறான சில காரியங்களைப் பவுல் செய்ததாக யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அவர்களது சொந்த யூதவிதிகளைப் பற்றியது. இந்த விஷயங்கள் எதுவும் சிறைத் தண்டனைக்கோ மரண தண்டனைக்கோ ஏற்றவை அல்ல. 30 சில யூதர்கள் பவுலைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாமதிக்காமல் நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். அவனுக்கெதிரான காரியங்களை உங்களுக்குச் சொல்லுமாறு நான் அந்த யூதர்களுக்குச் சொல்லி இருக்கிறேன் என்பதே.

31 அவர்களுக்குச் சொல்லப்பட்ட காரியங்களை வீரர்கள் செய்தனர். அன்றிரவு அந்திபத்ரி நகரத்திற்கு வீரர்கள் பவுலைக் கூட்டிச் சென்றனர். 32 மறு நாள் குதிரை மேலிருந்த வீரர்கள் பவுலோடு செசரியாவுக்குச் சென்றனர். ஆனால் மற்ற வீரர்களும் ஈட்டியேந்திய வீரர்களும் எருசலேமிலுள்ள படைக்கூடத்துக்குத் திரும்பினர். 33 குதிரை மேலிருந்த வீரர்கள் செசரியாவுக்குள் நுழைந்து ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தனர். பின் பவுலை அவரிடம் ஒப்படைத்தனர்.

34 ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, “நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார். 35 ஆளுநர், “உன்மீது குற்றம் சுமத்தியவர்கள் இங்கு வரும்போது வழக்கை விசாரிக்கிறேன்” என்றார். அரண்மனையில் பவுலை வைத்திருக்கும் பொருட்டு ஆளுநர் ஆணைகள் பிறப்பித்தார். (இக்கட்டிடம் ஏரோதால் கட்டப்பட்டது)

சங்கீதம் 3

தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு

கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர்,
    பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர்.
பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.

ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை.
    கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்!
நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன்.
    அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார்.

நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும்.
    இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும்.
    ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!

கர்த்தாவே, எழும்பும்!
    எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக!
நீர் வல்லமையுள்ளவர்!
    என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும்.

கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார்.
    கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.

நீதிமொழிகள் 18:14-15

14 நம்பிக்கையுடைய ஒருவன் நோயிலிருந்து விடுபடமுடியும். ஆனால் ஒருவன் தன்னை இழந்து போனவனாக எண்ணினால் அனைத்து நம்பிக்கைகளும் போய்விடும்.

15 அறிவுள்ளவன் மேலும் கற்றுக்கொள்ள விரும்புவான். அவன் மிகுதியான அறிவுக்காகக் கவனமாகக் கேட்பான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center