Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 3

தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு.

கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர்,
    பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர்.
பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.

ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை.
    கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்!

நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன்.
    அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார்.

நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும்.
    இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும்.
    ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!

கர்த்தாவே, எழும்பும்!
    எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக!
நீர் வல்லமையுள்ளவர்!
    என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும்.

கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார்.
    கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.

ஆபகூக் 2:5-11

தேவன், “மதுபானம் எத்தனை அதிகமாக ஒரு அகங்காரம் உள்ள மனிதனை ஏமாற்றுகிறது. அதே வழியில், வலிமையான ஒருவனின் பேராசை அவனை முட்டாளாக்கும். ஆனால் அவன் சமாதானத்தைப் பெறமாட்டான். அவன் மரணத்தைப் போன்றவன். அவன் எப்போதும் அதிகமாக சேர்க்க விரும்புகிறான். அவன் மரணத்தைப் போன்று எப்பொழுதும் திருப்தியைடையமாட்டான். அவன் தொடர்ந்துப் பிற நாடுகளைத் தோற்கடிப்பான். அவன் தொடர்ந்து அந்த ஜனங்களைச் சிறைக் கைதிகளாக்குவான். ஆனால் ஜனங்கள் அவனைப் பார்த்து விரைவில் நகைப்பார்கள். அவர்கள் அவனது தோல்வியைப்பற்றி நகைத்து சொல்வார்கள், ‘இது மிகவும் மோசமானது. அந்த மனிதன் பலவற்றை எடுத்தான், அவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எடுத்தான், அவன் அதிகமான கடன்களை வசூலித்து அதினால் செல்வந்தனானான்.’”

“பலவானே, நீ ஜனங்களிடமிருந்து பணத்தை எடுத்திருக்கிறாய். ஒருநாள் அந்த ஜனங்கள் விழித்தெழுந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர்வார்கள். அவர்கள் உனக்கு எதிராக நிற்பார்கள். பிறகு அவர்கள் உன்னிடமிருந்து பொருட்களை எடுத்துக்கொள்வார்கள். நீ மிகவும் அஞ்சுவாய் நீ பல நாடுகளிலிருந்து பொருட்களை எடுத்திருக்கிறாய். எனவே, அந்த ஜனங்கள் உன்னிடமிருந்து மிகுதியாக எடுப்பார்கள். நீ ஏராளமான ஜனங்களைக் கொன்றிருக்கிறாய். நீ நிலங்களையும் நகரங்களையும் அழித்திருக்கிறாய். அங்கே உள்ள அனைத்து ஜனங்களையும் கொன்றிருக்கிறாய்.

“ஆமாம், தவறான காரியங்களால் செல்வம் சேர்த்தவனுக்குப் பெருங்கேடு ஏற்படும். அம்மனிதன் பாதுபாப்பான இடத்தில் வாழ்வதற்கு அவற்றைச் செய்கிறான். அவனிடமிருந்து மற்ற ஜனங்கள் பொருட்களைத் திருடாமல் தடுக்கமுடியும் என்று நினைக்கிறான். ஆனால் அவனுக்கு கேடுகள் ஏற்படும். 10 நீ (பலமுள்ளவன்) ஏராளமான ஜனங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறாய். ஆனால் அத்திட்டங்கள் உன் வீட்டிற்கு அவமானத்தைக் கொண்டுவரும். நீ கேடான காரியங்களைச் செய்திருக்கிறாய். நீ உனது வாழ்க்கையை இழப்பாய். 11 உனக்கு எதிராக சுவர்களிலுள்ள கற்களும் அழும். உன் சொந்த வீட்டிலுள்ள மர உத்திரங்களும் உனக்கெதிராக குற்றஞ்சாட்டும்.

1 யோவான் 5:1-5

தேவனின் மக்கள் உலகை எதிர்த்து வெற்றி பெறுகிறார்கள்

இயேசுவே கிறிஸ்து என நம்புகிற மக்கள் தேவனின் பிள்ளைகளாவர். பிதாவை நேசிக்கிற மனிதன் தேவனின் பிள்ளைகளையும் நேசிக்கிறான். நாம் தேவனின் பிள்ளைகளை நேசிக்கிறோம் என்பதை எவ்வாறு அறிவோம்? தேவனை நேசிப்பதாலும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதினாலும் அறிகிறோம். தேவனை நேசித்தல் என்பது அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்று பொருள்படும். தேவனின் கட்டளைகள் நமக்கு மிகவும் கடினமானவையல்ல. ஏன்? தேவனின் பிள்ளையாகிய ஒவ்வொரு மனிதனும் உலகை எதிர்த்து வெல்கிற ஆற்றல் பெற்றிருக்கிறான். நமது விசுவாசமே உலகத்திற்கு எதிராக வென்றது. எனவே உலகை எதிர்த்து வெற்றியடைகிற மனிதன் யார்? இயேசு தேவனின் குமாரன் என்று நம்புகிற ஒருவனே ஆவான்.

1 யோவான் 5:13-21

நமக்கு இப்போது நித்திய ஜீவன் உண்டு

13 தேவனின் குமாரனை நம்புகிற மக்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். உங்களுக்கு இப்போது நித்திய ஜீவன் கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறியும்படியாக இதை எழுதுகிறேன். 14 எந்த ஐயமுமின்றி நாம் தேவனிடம் வரமுடியும். அவர் மனம் ஒத்துக்கொள்கிற எதனையும் நாம் தேவனிடம் வேண்டுகிறபோது, நாம் கேட்பதை தேவன் கவனிக்கிறார். 15 நாம் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் தேவன் கவனித்துக் கேட்கிறார். எனவே, நாம் தேவனிடமிருந்து கேட்கிற பொருட்களை அவர் நமக்குத் தருவார் என்பதை நாம் அறிகிறோம்.

16 கிறிஸ்துவில் சகோதரனோ சகோதரியோ நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவம் செய்வதை ஒருவன் பார்க்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பாவம் செய்கிற அந்த சகோதரன் அல்லது சகோதரிக்காக பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்போது தேவன் அச்சகோதரன் அல்லது சகோதரிக்கு ஜீவனைக் கொடுப்பார். நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவத்தைச் செய்கிற மக்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மரணத்திற்குள் வழி நடத்தும் பாவமுண்டு. அத்தகைய பாவத்திற்காக ஒரு மனிதன் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை. 17 தவறு செய்வது எப்பொழுதும் பாவமாகும். ஆனால் நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவமுமுண்டு.

18 தேவனின் பிள்ளையாக மாறிய மனிதன் பாவம் செய்வதைத் தொடர்வதில்லை என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன், தேவனின் பிள்ளையைப் பாதுகாக்கிறார். தீயவனால் அம்மனிதனைத் துன்புறுத்த இயலாது. 19 நாம் தேவனுக்கு உரியவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் தீயவனோ உலகம் முழுவதையும் கட்டுப்படுத்துகிறான். 20 தேவகுமாரன் வந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன் நமக்குத் தெளிவை கொடுத்திருக்கிறார். உண்மையான தேவனை இப்போது நாம் அறியமுடியும். தேவனே உண்மையான ஒருவர். அந்த உண்மையான தேவனிடமும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமும் நமது ஜீவன் உள்ளது. அவரே உண்மையான தேவனும், அவரே நித்திய ஜீவனுமானவர். 21 ஆகையால், அன்பான மக்களே, விக்கிரகங்களாகிய போலிக் கடவுள்களை விட்டு நீங்கள் தூர விலகுங்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center