Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 1-2

ஆதாம் முதல் நோவா வரையுள்ள குடும்ப வரலாறு

1-3 ஆதாம், சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேத், ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா.

சேம், காம், யாப்பேத் ஆகியோர் நோவாவின் குமாரர்கள்.

யாப்பேத்தின் சந்ததியினர்

கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் ஆகியோர் யாப்பேத்தின் குமாரர்கள்.

அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா, ஆகியோர் கோமரின் குமாரர்கள்.

எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் யாவானின் குமாரர்கள்.

காமின் சந்ததியினர்

கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் ஆகியோர் காமின் குமாரர்களாவார்கள்.

சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா ஆகியோர் கூஷின் குமாரர்களாவார்கள். சேபா, திதான், ஆகியோர் ராமாவின் குமாரர்களாவார்கள்.

10 நிம்ரோதின் சந்ததியான கூஷ், வளர்ந்து பலமுள்ள தைரியமிக்க வீரனாக உலகில் விளங்கினான்.

11 லுதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர் ஆகியோரின் தந்தை மிஸ்ராயிம் (எகிப்து) 12 மேலும் மிஸ்ராயும் பத்ரூசியர், கஸ்லூகியர் கப்தோரியர் ஆகியோருக்கும் தந்தை (பெலிஸ்தியர்கள் கஸ்லூகியரிலிருந்து வந்தவர்கள்.)

13 கானான் சீதோனின் தந்தை ஆவான். சீதோன் இவனது மூத்த குமாரன். கானான் சீதோனுக்கும் கேத்துக்கும் தந்தை ஆவான். 14 அவன் எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும் 15 ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும், 16 அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

சேமின் சந்ததியினர்

17 ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் ஆகியோர் சேமின் குமாரர்களாவார்கள்.

18 அர்பக்சாத் சாலாவின் தந்தை. சாலா ஏபேரின் தந்தை.

19 ஏபேருக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். ஒரு குமாரனின் பெயர், பேலேகு ஆகும். ஏனென்றால், இவனது வாழ்நாளில் தான் பூமியிலுள்ள ஜனங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டனர். பேலேகின் சகோதரனது பெயர் யொக்தான் ஆகும். 20 அல்மோதாத், சாலேப், ஆசர்மாவேத், யேராகை, 21 அதோராம், ஊசால், திக்லா, 22 ஏபால், அபிமாவேல், சேபா, 23 ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரை யொக்தான் பெற்றான். கீழ்க்கண்ட அனைவரும் யோக்தானின் குமாரர்களாவார்கள்.

24 சேம், அர்பக்சாத், சாலா, 25 ஏபேர், பேலேகு, ரெகூ, 26 செரூகு, நாகோர், தேராகு, 27 ஆபிராமாகிய ஆபிரகாம் ஆகியோர்.

ஆபிரகாமின் குடும்பம்

28 ஈசாக்கும், இஸ்மவேலும் ஆபிரகாமின் குமாரர்களாவார்கள். 29 கீழ்க்கண்டவர்கள் இவர்களது சந்ததியாவார்கள்:

இஸ்மவேலின் மூத்த குமாரனான நெபாயோத், மற்ற குமாரர்களான கேதார், அத்பியேல், மிப்சாம், 30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, 31 யெத்தூர், நாபீஸ், கேத்மா, ஆகியோர்.

32 கேத்தூராள் ஆபிரகாமின் பெண் வேலைக்காரி. சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா ஆகியோர் இவளது பிள்ளைகள். சேபாவும் தேதானும் யக்ஷானின் பிள்ளைகள்.

33 ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா ஆகியோர் மீதியானின் குமாரர்கள். இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் சந்ததியார்.

சாராளின் குமாரர்கள்

34 ஆபிரகாம் ஈசாக்கின் தந்தை. ஏசாவும், இஸ்ரவேலும் ஈசாக்கின் குமாரர்கள்.

35 எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு ஆகியோர் ஏசாவின் குமாரர்கள்.

36 தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு ஆகியோர் எலீப்பாசின் குமாரர்கள்.

37 நகாத், சேராகு, சம்மா, மீசா ஆகியோர் ரெகுவேலின் குமாரர்கள்.

சேயீரிடமிருந்து ஏதோமியர்கள்

38 லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் ஆகியோர் சேயீரின் குமாரர்கள்.

39 ஓரியும், ஓமாமும் லோத்தானின் குமாரர்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி ஆவாள்.

40 அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் ஆகியோர் சோபாலின் குமாரர்கள். அயாவும், ஆனாகும் சிபியோனின் குமாரர்கள்.

41 ஆனாகின் குமாரர்களில் திஷோனும் ஒருவன். அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் ஆகியோர் திஷோனின் குமாரர்கள்.

42 பில்கான், சகவான், யாக்கான் ஆகியோர் ஏத்சேரின் குமாரர்கள்.

ஊத்ஸ், அரான் ஆகியோர் திஷானின் குமாரர்கள்.

ஏதோமின் ராஜாக்கள்

43 இஸ்ரவேல் ஜனங்களை அரசனொருவன் ஆள்வதற்கு முன்பே ஏதோம் நிலத்தை பல ராஜாக்கள் ஆண்டு வந்தார்கள். அந்த ராஜாக்களின் பெயர்கள்:

பேயோரின் குமாரன் பேலா. இவனது நகரத்தின் பெயர் தின்காபா ஆகும்.

44 பேலா மரித்ததும் போஸ்ராவைச் சேர்ந்த சேராகின் குமாரன் யோபாப் இவனுக்குப் பதில் ராஜா ஆனான்.

45 யோபாப் மரித்ததும், தேமானியரின் நாட்டானாகிய ஊசாம் புதிய ராஜா ஆனான்.

46 ஊசாம் மரித்த பின், பேதாதின் குமாரன் ஆதாத் அவனுக்குப் பதில் ராஜா ஆனான். இவன் மீதீயானியரை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தான். இவனது நகரத்தின் பெயர் ஆவீத் ஆகும்.

47 ஆதாத் மரித்த பின், மஸ்ரேக்கா ஊரைச் சேர்ந்த சம்லா அவனுக்குப் பதில் ராஜா ஆனான்.

48 சம்லா மரித்த பின் சவுல் புதிய ராஜா ஆனான். இவன் ஐபிராத்து ஆற்றின் கரையில் உள்ள ரேகோபோத்தைச் சேர்ந்தவன்.

49 சவுல் மரித்த பின், அக்போரின் குமாரனான பாகாலானான் அவனுக்குப் பதில் ராஜா ஆனான்.

50 பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவனுக்குப் பின் புதிய ராஜா ஆனான். இவனது நகரத்திற்கு பாகி என்று பெயரிடப்பட்டது. ஆதாத்தின் மனைவியின் பெயர் மெகேதபேல் ஆகும். மாத்திரேத்தின் குமாரத்தி மெகேதபேல் ஆவாள். மேசகாபின் குமாரத்தி மாத்திரேத் ஆவாள். பிறகு, ஆதாத் மரித்தான். 51 ஆதாத் மரித்தபின், ஏதோமில் திம்னா, அல்யா, எதேத். 52 அகோலிபாமா, ஏலா, பினோன், 53 கேனாஸ், தேமான், மிப்சார், 54 மக்தியேல், ஈராம் ஆகியோர் ஏதோமின் தலைவர்கள் ஆனார்கள்.

இஸ்ரவேலின் குமாரர்கள்

ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் ஆகியோர் இஸ்ரவேலின் குமாரர்களாவார்கள்.

யூதாவின் குமாரர்கள்

ஏர், ஓனான், சேலா ஆகியோர் யூதாவின் குமாரர்கள். இந்த மூன்றுபேரும் பத்சூவா பெற்ற பிள்ளைகள். இவள் கானான் நாட்டுப் பெண். யூதாவின் முதல் குமாரனான ஏர், கெட்டவனாக இருப்பதைக் கர்த்தர் கண்டார். அதனால் கர்த்தர் அவனை கொன்றுவிட்டார். யூதாவின் மருமகளான தாமார் அவனுக்குப் பாரேஸ், சேரா எனும் இருவரைப் பெற்றாள். ஆக யூதாவுக்கு 5 குமாரர்கள் இருந்தார்கள்.

எஸ்ரோனும் ஆமூலும், பாரேசின் குமாரர்களாவார்கள். சேராவுக்கு 5 குமாரர்கள். சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா ஆகியோர் ஆவார்கள்.

சிம்ரியின் குமாரன் கர்மீ. கர்மீயின் குமாரன் ஆகார். ஆகார் இஸ்ரவேலுக்குப் பல தொல்லைகளை வரவழைத்தவன். இவன் போரில் சில பொருட்களை எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் தேவனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

அசரியா ஏத்தானின் குமாரன்.

யெர்மெயேல், ராம், கெலுபா ஆகியோர் எஸ்ரோனின் பிள்ளைகள்.

ராமின் சந்ததியினர்

10 ராம், அம்மினதாபின் தந்தை ஆவார். அம்மினதாப், நகசோனின் தந்தை ஆவார். நகசோன், யூத ஜனங்களின் பிரபு. 11 நகசோன் சல்மாவின் தந்தை. சல்மா போவாசின் தந்தை. 12 போவாஸ் ஓபேதின் தந்தை. ஓபேத் ஈசாயின் தந்தை. 13 ஈசாய் எலியாபின் தந்தை. இவன் அவனது மூத்த குமாரன். இவனது இரண்டாவது குமாரன் அபினதாப். இவனது மூன்றாவது குமாரன் சிம்மா. 14 இவனது நான்காவது குமாரன் நெதனெயேல், இவனது ஐந்தாவது குமாரன் ரதாயி. 15 இவனது ஆறாவது குமாரன் ஓத்சேம், ஏழாவது குமாரன் தாவீது. 16 செருயாளும் அபிகாயிலும் இவர்களது சகோதரிகள். செருயாளிற்கு அபிசாய், யோவாப், ஆசகேல் என மூன்று குமாரர்கள். 17 அபிகாயில் அமாசாவின் தாய், இஸ்மவேலனாகிய யெத்தேர் அமாசாவின் தந்தை.

காலேப்பின் சந்ததியினர்

18 காலேப் எஸ்ரோனின் குமாரன். காலேபிற்கு பிள்ளைகளும் அசுபா என்ற மனைவியும் இருந்தனர். அசுபா எரீயோத்தின் குமாரத்தி. ஏசேர், சோபாப், அர்தோன் ஆகியோர் அவனது பிள்ளைகளாவார்கள். 19 அசுபா மரித்ததும் காலேப் எப்ராத்தை மணந்துக் கொண்டான். இருவருக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவர்கள் அவனுக்கு ஊர் என்று பெயரிட்டனர். 20 ஊர் ஊரியின் தந்தையானான். ஊரி பெசலெயேலின் தந்தையானான்.

21 பின்னர், எஸ்ரோனுக்கு அறுபது வயது ஆனதும், அவன் மாகீரின் குமாரத்தியை மணந்துக் கொண்டான். மாகீர் கிலெயாத்தின் தந்தை. எஸ்ரோன் மாகீரின் மகளோடு பாலின உறவுகொண்டான். அவள் செகூப்பை பெற்றாள். 22 செகூப் யாவீரின் தந்தை. யாவீருக்கு கிலேயாத் நிலத்தில் 23 நகரங்கள் இருந்தன. 23 ஆனால் கேசூரும் ஆராமும் யாவீரின் ஊர்களை எடுத்துக்கொண்டார்கள். அவற்றுள் ஜாயிர் நகர் மற்றும் கேனாத் நகரும் அதனைச் சுற்றியுள்ள 60 சிற்றூர்களும் அடங்கும். இந்நகரங்களும் ஊர்களும் கிலேயாத்தின் தந்தையான, மாகீரின் குமாரர்களுக்கு உரியவை.

24 எஸ்ரோன் எப்ராத்தாவில் உள்ள ஊரான காலேப்பில் மரித்தான். மரித்த பிறகு, அவன் மனைவியான அபியாள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனது பெயர் அசூர். அவன் தெக்கொவாவின் தந்தை.

யெர்மெயேலின் சந்ததியினர்

25 யெர்மெயேல் எஸ்ரோனின் முதல் குமாரன். யெர்மெயேலுக்கு ராம், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா எனும் பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் ராம் மூத்த குமாரன். 26 யெர்மெயேலுக்கு, அத்தாராள் எனும் பேருடைய இன்னொரு மனைவியும் இருந்தாள். இவள் ஓனாமின் தாய்.

27 யெர்மெயேலின் மூத்தகுமாரனான ராமிற்குப் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மாஸ், யாமின், எக்கேர் ஆகியோராகும்.

28 ஓனாவிற்கு சம்மாய், யாதா என்ற பிள்ளைகள் இருந்தனர். சம்மாயிற்கு நாதாப், அபிசூர் எனும் பிள்ளைகள் இருந்தனர்.

29 அபிசூரின் மனைவியின் பெயர் அபியாயேல், அவர்களுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தனர். அக்பான், மோளித் என்பவை அவர்களின் பெயர்.

30 சேலேத்தும், அப்பாயிமும் நாதாப்பின் குமாரர்கள். சேலேத் பிள்ளைப்பேறு இல்லாமலேயே மரித்துப் போனான்.

31 அப்பாயீமின் குமாரன் இஷி, இஷியின் குமாரன் சேசான், சேசானின் குமாரன் அக்லாய்

32 யாதா சம்மாயின் சகோதரன், யெத்தெரும் யோனத்தானும் யாதாவின் குமாரர்கள், யெத்தெர் பிள்ளைப்பேறு இல்லாமலே மரித்துப்போனாள்.

33 பேலேத்தும் சாசாவும் யோனத்தானின் குமாரர்கள். இதுவே யெர்மெயேலின் குடும்பப் பட்டியலாகும்.

34 சேசானுக்கு குமாரர்கள் இல்லை. அவனுக்கு குமாரத்திகளே இருந்தனர். சேசாறுக்கு எகிப்திலுள்ள யர்கா என்ற பேருள்ள வேலைக்காரன் இருந்தான். 35 சேசான் யர்காவைத் தன் குமாரத்தி மணந்துகொள்ளும்படி அனுமதித்தான். அவர்களுக்கு ஒரு குமாரன் இருந்தான். அவனது பெயர் அத்தாயி.

36 அத்தாயி நாதானின் தந்தை, நாதான் சாபாத்தின் தந்தை, 37 சாபாத் எப்லாலின் தந்தை, எப்லால் ஓபேத்தின் தந்தை, 38 ஓபேத் ஏகூவின் தந்தை, ஏகூ அசரியாவின் தந்தை, 39 அசரியா ஏலேத்ஸின் தந்தை, ஏலேத்ஸ் எலெயாசாவின் தந்தை, 40 எலெயாசா சிஸ்மாயின் தந்தை, சிஸ்மாய் சல்லூமின் தந்தை, 41 சல்லூம் எக்கமியாவின் தந்தை, எக்கமியா எலிசாமாவின் தந்தை.

காலேபின் குடும்பம்

42 காலேப் யெர்மெயேலின் சகோதரன். காலேபின் முதல் குமாரன் மேசா. மேசா சீப்பின் தந்தை. மேசாவின் மற்றொரு குமாரன் மெரேசா. மெரேசா எப்ரோனின் தந்தை.

43 கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா ஆகியோர் எப்ரோனின் குமாரர்கள். 44 செமாராகிமின் தந்தை. ராகிம் யோர்க்கேயாமின் தந்தை. ரெக்கேம் சம்மாயின் குமாரன். 45 சம்மாய் மாகோனின் தந்தை, மாகோன் பெத்சூரின் தந்தை.

46 காலேபின் வேலைக்காரியாக எப்பாள் இருந்தாள். அவள் ஆரான், மோசா, காசே ஆகியோரின் தாய். ஆரான் காசேசின் தந்தை.

47 ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் ஆகியோர் யாதாயின் குமாரர்கள்.

48 மாகா காலேப்பின் இன்னொரு வேலைக்காரி. அவள் சேபேர் திர்கானா ஆகியோரின் தாயானாள். 49 மாகா, சாகாப், சேவா ஆகியோருக்கும் தாயானாள். சாகாப் மத்மன்னாவின் தந்தையானான். சேவா மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தந்தையானான். காலேபின் குமாரத்தி அக்சாள்.

50 இது காலேபின் சந்ததியாரின் விபரமாகும். ஊர், காலேபின் முதல் குமாரன். அவன் எப்ராத்தானிடம் பிறந்தான். கீரியாத் யாரீமை உருவாக்கிய சோபால், 51 பெத்லெகேமை உருவாக்கிய சல்மா, பெத்காதேரை உருவாக்கிய ஆரேப்பு ஆகியோர் ஊரின் குமாரர்கள் ஆவார்கள்.

52 சோபால் கீரியாத்யாரீமினை உருவாக்கியவன். இது சோபாலின் சந்ததியாரின் விபரம். ஆராவோ, ஆசியம் மெனுகோத்தின் பாதியளவு ஜனங்களும் 53 கீரியாத்யாரீமின் கோத்திரங்களும் எத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோர் ஆவார்கள். மிஸ்ராவியரிடமிருந்து சோராத்தியரும் எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.

54 இது சல்மா சந்ததியின் விபரமாகும்: பெத்லேகேம், நேத்தோபாத், அதரோத், பெத்யோவாப் ஆகிய நகர ஜனங்களும் மானாத்தியரில் பாதி ஜனங்களும் சோரியரில் பாதி ஜனங்களும், 55 யாபேசில் குடியிருந்த எழுத்தாளர்களின் குடும்பங்கள், திராத்தியரும், சிமாத்தியரும் சுக்காத்தியரும் ஆவர். பெத்ரேகாப்பின் தந்தையான அம்மாத்திலிருந்து வந்த கேனியர்களே கணக்கர்கள்.

எபிரேயர் 8

இயேசுவே நமது பிரதான ஆசாரியர்

பரலோகத்தில் தேவனுடைய சிம்மாசனத்திற்கு வலதுபக்கமாய் வீற்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார் என்பதையே நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். மேலும், பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்லாமல் தேவனால் ஸ்தாபிக்கப்பட்ட பரிசுத்தக் கூடாரத்திலும் அவர் ஆசாரியராக சேவை செய்துகொண்டிருக்கிறார்.

காணிக்கைகளையும் பலிகளையும் கொடுக்கும் பொருட்டு ஒரு பிரதான ஆசாரியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆதலால் வழங்குவதற்கு ஏதோ ஒன்று இயேசுவுக்கும் தேவையாயிருக்கிறது. நமது பிரதான ஆசாரியனும் இப்போது பூமியில் இருந்திருந்தால், ஆசாரியனாக இருக்கமாட்டார். ஏனெனில் சட்டம் விவரிக்கிற காணிக்கைகளை வழங்குகிற ஆசாரியர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். அவர்கள் புரியும் சேவையானது பரலோகத்தில் உள்ள சேவையின் சாயலாகவும், நிழலாகவும் மட்டுமே இருக்கிறது. அதனால்தான் பரிசுத்தக் கூடாரத்தை மோசே ஸ்தாபிக்கப் போகும்போது தேவன் எச்சரித்தார். “மலையிலே உனக்கு நான் காட்டிய மாதிரியின்படியே நீ ஒவ்வொன்றையும் செய்ய உறுதியாய் இரு” என்று தேவன் சொன்னார். மிக உயர்ந்த கடமையானது இயேசுவுக்குத் தரப்பட்டது என்பதே இதன் பொருள் ஆகும். மேலும் இதே முறையில் அவர் நடுவராக இருக்கிற உடன்படிக்கையும் உயர்வானதாகும். ஏனெனில், நல்ல வாக்குறுதிகளால் இந்த உடன்படிக்கை நிறுவப்பட்டது.

பழைய உடன்படிக்கையில் எவ்விதக் குறையும் இல்லாவிட்டால் இரண்டாவது உடன்படிக்கைக்குத் தேவையில்லாமல் போயிருக்கும். ஆனால் தேவன் மக்களிடம் சில பிழைகளைக் கண்டுபிடித்து அவர்களிடம்,

“இஸ்ரவேல்[a] மக்களோடும் யூதா மக்களோடும்
    ஒரு புதிய உடன்படிக்கையை நான் ஏற்படுத்தும் காலம் வந்துகொண்டிருக்கிறது.
அவர்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று எகிப்துக்கு வெளியே வழி நடத்தியபோது அவர்களுடைய முன்னோர்களோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கைபோல் அது இருக்காது.
    அது வித்தியாசமாக இருக்கும், ஏனெனில், அந்த உடன்படிக்கைக்கு அவர்கள்
உண்மையுள்ளவர்களாகத் தொடர்ந்து இருக்கவில்லை என்பதால் நான் அவர்களிடமிருந்து விலகினேன்.”
    அக்காரியங்களைக் கர்த்தர் சொன்னார்.
10 “அந்த நாட்களுக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களோடு நான் செய்துகொள்ளும் புதிய உடன்படிக்கையாகும் இது.
    நான் எனது சட்டங்களை அவர்கள் மனங்களில் பதித்து அவர்கள் இதயங்களின் மேல் எழுதுவேன்.
நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.
    அவர்கள் எனது பிள்ளைகளாக இருப்பார்கள்.
11 அதற்குப் பின்பு கூடவாழும் குடிமகனுக்கோ அல்லது தேசத்தவனுக்கோ கர்த்தரை அறிந்துகொள் எனப் போதிக்கவேண்டிய அவசியம் ஒருவனுக்கும் இருக்காது.
ஏனெனில் சிறியவன் முதற் கொண்டு பெரியவன் வரைக்கும் அவர்கள் எல்லாரும் என்னை அறிவார்கள்.
12 ஏனெனில் நான் அவர்கள் எனக்கெதிராகச் செய்த தவறுகளை மன்னித்து விடுவேன்.
    அவர்களின் பாவங்களை இனிமேல் நினையாது இருப்பேன்.”(A)

13 தேவன் இதனைப் புதிய உடன்படிக்கை என்று அழைத்தபோது முதல் உடன்படிக்கையை பழசாக்கினார். இப்போது பழமையானதும் நாள்பட்டிருக்கிறதுமான அந்த உடன்படிக்கை விரைவில் மறைந்துபோகும்.

ஆமோஸ் 2

மோவாபின் தண்டனை

கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக மோவாப் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் மோவாபியர், ஏதோம் ராஜாவின் எலுப்புகளைச் சுண்ணாம்பில் எரித்தார்கள். எனவே நான் மோவாப் நாட்டில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு கீரியோத்தின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும். அங்கே பயங்கர சத்தமும் எக்காளச் சத்தமும் கேட்க அவர்கள் மரிபார்கள். எனவே நான் மோவாபின் ராஜாக்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். நான் மோவாபின் அனைத்துத் தலைவர்களையும் கொல்வேன்” கர்த்தர் இதனைக் கூறினார்.

யூதாவுக்கான தண்டனை

கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக யூதாவை அவர்களது பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்தார்கள். அவர்கள் அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. அவர்கள் முற்பிதாக்கள் பொய்களை நம்பினார்கள். அதே பொய்கள் யூதாவின் ஜனங்கள் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தக் காரணமாயிருந்தது. எனவே. நான் யூதாவில் நெருப்பை பற்றவைப்பேன். அந்த நெருப்பு எருசலேமிலுள்ள உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.”

இஸ்ரவேலுக்கான தண்டனை

கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக இஸ்ரவேலர்களை அவர்களது பல குற்றறங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கொஞ்சம் வெள்ளிக்காக அப்பாவி ஜனங்களை விற்றார்கள். அவர்கள் ஏழை ஜனங்களை பாதரட்சைளுக்காக விற்றார்கள். அவர்கள் ஏழை ஜனங்களை முகம் குப்புற தரையில் தள்ளி அவர்கள் மேல் நடந்தார்கள். அவர்கள் துன்பப்படுகிற ஜனங்களின் சத்தத்தைக் கேட்பதை நிறுத்தினர். தந்தைகளும் குமாரர்களும் ஒரே பெண்ணிடம் பாலினஉறவு கொள்கிறார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான நாமத்தை பாழாக்கி விட்டார்கள். அவர்கள் ஏழைகளிடமிருந்து ஆடைகளை எடுத்து அந்த ஆடைகளின் மேல் உட்கார்ந்து அவர்கள் பலிபீடங்களில் ஆராதிக்கிறார்கள். அவர்கள் ஏழை ஜனங்களுக்கு கடன் தந்து அவர்கள் ஆடைகளை அடைமானமாக எடுத்தார்கள். அவர்கள் ஜனங்கள் அபராதம் செலுத்தும்படிச் செய்தார்கள். அப்பணத்தில் மது வாங்கி அவர்கள் பொய் தெய்வத்தின் கோயிலில் குடித்து மகிழ்ந்தார்கள்.

“ஆனால் அவர்களுக்கு முன்பாகவே எமோரியர்களை அழித்தது நான். எமோரியர்கள் கேதுரு மரங்களைப்போன்று உயரமானவர்கள். அவர்கள் கர்வாலி மரங்களைப்போல் வைரமாயிருந்தவர்கள். ஆனால் நான் அவர்களது மேலே உள்ள பழங்களையும் கீழேயுள்ள வேர்களையும் அழித்தேன்.

10 “நானே உங்களை எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தேன். நான் 40 வருடங்கள் உங்களை வானந்தரத்தில் வழிநடத்தினேன். நீங்கள் எமோரியரின் நாட்டை எடுத்துக்கொள்ள உதவினேன். 11 நான் உங்கள் குமாரர்களில் சிலரைத் தீர்க்கதரிசிகள் ஆக்கினேன். நான் உங்களது இளைஞர்களில் சிலரை நசரேயர்களாக ஆக்கினேன். இஸ்ரவேல் ஜனங்களே, இது உண்மை” என்று கர்த்தர் சொல்லுகிறார். 12 “ஆனால் நீங்கள் நசரேயர்களை மது குடிக்கச் செய்தீர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளை தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொன்னீர்கள். 13 நீங்கள் எனக்குப் பெரிய பாரத்தைப் போன்றவர்கள். நான் பாரம் ஏற்றப்பட்ட வண்டியைப்போன்று வளைந்திருக்கிறேன். 14 என்னிடமிருந்து எவரும், வேகமான ஓட்டக்காரன் கூடத் தப்பிக்க முடியாது. பலவான்களுக்குப் போதுமான பலம் இருக்காது. படைவீரர்கள் தம்மைத்தாம் காப்பாற்றிக்கொள்ள முடியாது. 15 ஜனங்கள் வில்லோடும் அம்போடும் இருந்தும் உயிர் பிழைப்பதில்லை. வேகமாக ஓடுபவனும் தப்ப முடியாது. குதிரையில் வருகிறவர்களும் உயிரோடு தப்ப முடியாது. 16 அப்போது மிகத் தைரியமான வீரனும் ஓடிப்போவான். அவர்கள் தம் ஆடைகளை அணிந்துகொள்ளக் கூட நேரம் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்” என்று கர்த்தர் கூறினார்.

சங்கீதம் 145

தாவீதின் ஜெபங்களுள் ஒன்று.

145 என் தேவனும் ராஜாவுமாகிய உம்மைத் துதிக்கிறேன்.
    உமது நாமத்தை நான் என்றென்றும் எப்போதும் போற்றுகிறேன்.
நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன்.
    நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன்.
கர்த்தர் பெரியவர்.
    ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள்.
    அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது.

கர்த்தாவே, நீர் செய்யும் காரியங்களுக்காக ஜனங்கள் உம்மை என்றென்றும் எப்போதும் துதிப்பார்கள்.
    நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைக் குறித்து அவர்கள் சொல்வார்கள்.
உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை.
    உமது அதிசயங்களைப் பற்றி நான் சொல்வேன்.
கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
    நீர் செய்யும் மேன்மையான காரியங்களைப்பற்றி நான் சொல்வேன்.
நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
    உமது நன்மையைப்பற்றி ஜனங்கள் பாடுவார்கள்.

கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர்.
    கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர்.
கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர்.
    தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார்.
10 கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும்.
    உம்மைப் பின்பற்றுவோர் உம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.
11 உமது அரசு எவ்வளவு மேன்மையானது என அவர்கள் சொல்வார்கள்.
    நீர் எவ்வளவு மேன்மையானவர் என்பதை அவர்கள் சொல்வார்கள்.
12 கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள்.
    உமது அரசு எவ்வளவு மேன்மையும் அற்புதமுமானது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
13 கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும்.
    நீர் என்றென்றும் அரசாளுவீர்.

14 கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார்.
    கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார்.
15 கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன.
    அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர்.
16 கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து,
    ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர்.

17 கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே.
    அவர் செய்பவை எல்லாம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டும்.
18 கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
    உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
19 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோர் விரும்புகின்றவற்றைச் செய்கிறார்.
    கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோருக்குச் செவிகொடுக்கிறார்.
    அவர்களின் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
20 கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார்.
    ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.

21 நான் கர்த்தரைத் துதிப்பேன்!
    என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center