129 Bible results for “கொலை ” from 
Tamil Bible: Easy-to-Read Version.dropdown
 Results 1-16. 
Filter by dropdown
dropdown
results per page
  1. பின்னர் தேவன், தண்டனைக்குப் பொறுப்பாக இருந்த தலைவர்களிடம் சத்தமிட்டார். ஒவ்வொரு தலைவரும் தமது கையில் கொலைக்குரிய ஆயுதங்களை வைத்திருந்தனர்.
  2. தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் வம்சத்தாரும் யூதா வம்சத்தாரும் மிகவும் மோசமான பாவங்களைச் செய்திருக்கின்றனர்! நாட்டில் ஒவ்வொரு இடங்களிலும் ஜனங்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். நகரம் குற்றங்களால் நிறைந்திருக்கின்றது. ஏனென்றால், ஜனங்கள் தங்களுக்குள் ‘கர்த்தர் நாட்டை விட்டு விலகினார். நாம் செய்கின்றவற்றை அவரால் பார்க்க முடியாது’ என்று கூறுகின்றனர்.
  3. பிறகு நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னைக் கொலைக்காரியாகவும் சோரம் போனவளாகவும் தண்டிப்பேன். ஒரு கோபமும் பொறாமையும்கொண்ட கணவனால் பழி தீர்க்கப்படுவதுபோல் தண்டிப்பேன்.
  4. “ஆனால் அந்நல்லவனுக்கு ஒரு மகன் பிறந்து அவன் தன் தந்தையைப்போல் இந்நற்காரியங்களில் எதையும் செய்யாதவனாக இருக்கலாம். அந்த மகன் பொருட்களைத் திருடலாம், பிறரைக் கொலை செய்யலாம்.
  5. எனவே, வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது. இப்போது இதனைப் பயன்படுத்த முடியும். வாள் கூர்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. இப்போது இது கொலையாளியின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
  6. தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, உன் கைகளைத் தட்டு. எனக்காக ஜனங்களிடம் பேசு. இந்த வாள் கீழே இரண்டு முறை வரட்டும்! மூன்று முறை வரட்டும். இந்த வாள் ஜனங்களைக் கொல்வதற்குரியது! இந்த வாள் பெருங் கொலைக்குரியது. இந்த வாள் ஜனங்களுக்குள் ஊடுருவுமாறு செருகப்பட்டிருக்கிறது.
  7. அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

    தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் கூறு, இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் அம்மோன் ஜனங்களிடமும் அவர்களின் அவமானத்திற்குரிய பொய்த் தேவனிடமும் இவற்றைச் சொல்கிறார்: “‘பார், ஒரு வாள்! வாள் உறையிலிருந்து வெளியே உள்ளது. வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது! வாள் கொலை செய்யத் தயாராக இருக்கிறது. இது மின்னலைப்போன்று ஒளிவிட கூர்மையாக்கப்பட்டுள்ளது!
  8. “மனுபுத்திரனே, நீ நியாயம் தீர்ப்பாயா? கொலைக்காரர்களின் நகரத்தை (எருசலேம்) நியாயம்தீர்ப்பாயா? நீ அவளிடம் அவள் செய்த அருவருப்புகளை எல்லாம் சொல்வாயா?
  9. நீ கூறவேண்டும், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இந்நகரம் கொலைக்காரர்களால் நிறைந்திருக்கிறது. எனவே அவளது தண்டனைக் காலம் வந்திருக்கிறது. அவள் தனக்குள் அசுத்த விக்கிரகங்களைச் செய்தாள். அவை அவளை தீட்டுப்படுத்தின.
  10. அவர்கள் விபச்சாரமாகிய பாவத்தைச் செய்தனர். அவர்கள் கொலைக் குற்றவாளிகள். அவர்கள் வேசிகளைப்போன்று நடந்துகொண்டனர். அவர்கள் அசுத்த விக்கிரகங்களுக்காக என்னை விட்டுவிட்டனர். அவர்கள் என் மூலம் குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்தி தீக்குள்ளாக்கி அந்த அசுத்த விக்கிரகங்களுக்கு போஜனப்பலியாகக் கொடுத்தனர்.
  11. “ஆனால் நல்லவர்கள் அவர்களைக் குற்றவாளியாக நியாயந்தீர்ப்பார்கள். அவர்கள் அப்பெண்களை அவர்களது விபச்சாரம் மற்றும் கொலை பாவங்களுக்காக நியாயந்தீர்ப்பார்கள். ஏனென்றால், அவர்கள் அகோலாளிடமும் அகோலிபாளிடமும் விபச்சாரப் பாவம் செய்தனர். அவர்களால் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் அவர்களது கையில் இன்னும் இருக்கிறது.”
  12. “‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இது எருசலேமிற்குக் கேடாகும். கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது கேடாகும். எருசலேம் துரு ஏறிய ஒரு பாத்திரத்தைப் போன்றது. அத்துரு நீக்க முடியாதது! அப்பாத்திரம் சுத்தமானதாக இல்லை, எனவே நீ அப்பாத்திரத்திலுள்ள எல்லாக் கறித் துண்டுகளையும் வெளியே எடுத்துப் போடவேண்டும்! அக்கெட்டுப்போன இறைச்சியில் ஆசாரியர்கள் எதையும் தேர்ந்தெடுக்க, தின்ன அனுமதிக்கவேண்டாம்.
  13. எருசலேம் துருவோடுள்ள பாத்திரத்தைப் போன்றது. ஏனென்றால் கொலைகளினால் ஏற்பட்ட இரத்தம் இன்னும் உள்ளது! அவள் வெறும் பாறையில் இரத்தத்தைப் போட்டாள்! அவள் இரத்தத்தை நிலத்தில் ஊற்றி அதைப் புழுதியினால் மூடவில்லை.
  14. “‘எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: கொலைக்காரர்கள் நிறைந்த இந்நகரத்துக்கு இது கேடாகும்! நான் நெருப்புக்காக நிறைய விறகுகளை அடுக்குவேன்.
  15. அவர்கள் உன்னைக் குழியிலே விழத் தள்ளுவார்கள். நீ கடலின் நடுவே கொலையுண்டு மரிக்கிற பயணிகளைப்போன்று மரிப்பாய்.
  16. அந்நியர்கள் உன்னை வெளிநாட்டவரைப்போல நடத்தி கொலை செய்வார்கள்! அவை நிகழும், ஏனென்றால், நான் கட்டளையிட்டேன்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

0 topical index results for “கொலை ”

Sorry. No results found for "கொலை" in Topical Index.