Add parallel Print Page Options

15 பிறகு வடபகுதி ராஜா வந்து நகரத்தின் மதில்களுக்கெதிராகக் கொத்தளங்களைக் கட்டுவான். பிறகு பலமான நகரத்தைப் பிடிப்பான். தென் பகுதி படைக்குத் திரும்பவும் போரிட வல்லமை இராது. தென்பகுதிப் படையிலுள்ள சிறந்த வீரர்களும் வடபகுதிப் படையைத் தடுக்கிற வல்லமை இல்லாமல் இருப்பார்கள்.

16 “வடபகுதி ராஜா தான் விரும்பியதையெல்லாம் செய்வான். எவரும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் வல்லைம பெற்று அழகான நாட்டை தன் அதிகாரத்திற்குள் கொண்டுவருவான். அவன் அதை அழிக்கிற வல்லமையையும் பெற்றிருப்பான். 17 வடபகுதி ராஜா தனது வல்லமை அனைத்தையும் பயன்படுத்தி தென்பகுதி ராஜாவோடு போரிட முடிவு செய்வான். அவன் தென்பகுதி ராஜாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். வடபகுதி ராஜா தனது குமாரத்திகளுள் ஒருத்தியைத் தென்பகுதி ராஜாவை மணந்துகொள்ளச் செய்வான். வடபகுதி ராஜா தென்பகுதி ராஜாவைத் தோற்கடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்வான். ஆனால் அத்திட்டங்கள் வெற்றியடையாது, அவன் திட்டங்கள் அவனுக்கு உதவாது.

Read full chapter