Add parallel Print Page Options

மோசே தேவனைப் புகழுகிறான்

26 “யெஷுரனுடைய, தேவனைப் போன்றவர் எவருமில்லை!
    தேவன் உனக்கு உதவுவதற்காகத் தமது மகிமையோடு மேகங்களின் மேல் சவாரி செய்து வானங்களின் மேல் வருகிறார்.
27 தேவன் என்றென்றும் வாழ்கிறார்.
    அவர் உனது பாதுகாப்பான இடம்.
தேவனின் வல்லமை என்றென்றும் தொடரும்!
    அவர் உன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்.
உனது பகைவர்கள் உன் நாட்டை விட்டு விலகும்படி தேவன் துரத்துவார்.
அவர், ‘பகைவரை அழித்துப்போடு’ என்று சொல்லுவார்.
28 எனவே இஸ்ரவேல் பாதுகாப்பில் வாழும்.
    யாக்கோபின் ஊற்று அவர்களுக்கு உரியதாக இருக்கும்.
அவர்கள் தானியமும், திராட்சை ரசமும் நிறைந்த நாட்டைப் பெறுவார்கள்.
    அந்த நாடு மிகுதியான மழையைப் பெறும்.
29 இஸ்ரவேலே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்.
    வேறு எந்த நாடும் உன்னைப் போன்றில்லை.
கர்த்தர் உன்னைக் காப்பாற்றினார்.
    கர்த்தர் உனக்குப் பாதுகாப்பான கேடயத்தைப் போன்றிருக்கிறார்!
    கர்த்தர் பலமுள்ள வாளைப் போன்றும் இருக்கிறார்.
உனது பகைவர்கள் உனக்குப் பயப்படுவார்கள்.
    நீ அவர்களது பரிசுத்த இடங்களை மிதிப்பாய்!”

Read full chapter