Add parallel Print Page Options

நீ நன்மை செய்திருந்தால் எனக்கு விருப்பமானவனாக இருந்திருப்பாய். நானும் உன்னை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் நீ தீமை செய்தால் பிறகு அந்தப் பாவம் உன் வாழ்வில் இருக்கும். உனது பாவம் உன்னை அடக்கி ஆள விரும்பும். நீயோ உன் பாவத்தை அடக்கி ஆளவேண்டும்” [a] என்றார்.

காயீன் தனது சகோதரன் ஆபேலிடம். “வயலுக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலுக்குப் போனார்கள். அங்கே காயீன் தன் தம்பியைத் தாக்கிக் கொலை செய்துவிட்டான்.

பிறகு கர்த்தர் காயீனிடம், “உனது சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. என் தம்பியைக் காவல் செய்வது என் வேலையில்லை” என்றான்.

Read full chapter

Footnotes

  1. ஆதியாகமம் 4:7 நீ...அடக்கி ஆளவேண்டும் அல்லது, “நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசலண்டையே பதுங்கி இருக்கும். பாவம் உன்னை ஆளுகை செய்ய விரும்பும். ஆனால் நீ அதின் மேல் ஆட்சி செய்யவேண்டும்.”