瘸腿的人痊癒

有一次,在下午三點[a]禱告的時候,彼得約翰上聖殿去。 一個生來[b]瘸腿的被人抬來。他天天被放在那叫「美門」的聖殿門口,為要向進聖殿的人乞討。 他看見彼得約翰正要進入聖殿,就求他們施捨。 彼得約翰注視著他,彼得說:「你看我們!」 那人就留意看他們,期待著從他們那裡得些什麼。 彼得卻說:「金子銀子我都沒有,只把我有的給你:奉拿撒勒人耶穌基督的名,起來[c]走路吧!」 彼得抓著他的右手,扶他起來。他的腳和踝骨立刻就健壯了。 他一跳,站了起來,並且行走,與他們一起進入聖殿,邊走邊跳,讚美神。 全體民眾都看見他邊走邊讚美神, 10 認出他是坐在聖殿的美門口乞討的那個人,就對發生在他身上的事滿心希奇、驚訝。

在所羅門柱廊裡傳道

11 那個人[d]緊拉著彼得約翰的時候,全體民眾都一起跑向他們,到叫做「所羅門」的柱廊那裡,滿心驚奇。 12 彼得看見,就對民眾說:「各位以色列人哪!你們為什麼對這事感到驚奇?為什麼注視我們,以為我們是憑著自己的能力或虔誠使這個人走路的呢? 13 亞伯拉罕以撒雅各的神[e],也就是我們祖先的神,已經榮耀了他的僕人耶穌。你們竟然把他交出去,並且在彼拉多判定要釋放他的時候,在彼拉多面前拒絕了他。 14 你們拒絕了神聖、公義的那一位,而要求釋放一個殺人犯給你們。 15 你們殺害了生命的創始者[f],神卻使他從死人中復活了!我們就是這事的見證人。 16 現在,基於對他名的信心,他的名就使你們所看見所認識的這個人健壯了;這由耶穌而來的信心,使他在你們眾人面前完全康復了。

17 「同胞們[g],現在我知道,你們所做的是出於愚昧無知,就像你們的首領那樣。 18 但神藉著眾先知的口所預言的,就是基督要受難的事,就這樣應驗了。 19 所以,你們應當悔改,應當回轉,使你們的罪孽被抹去, 20 這樣,更新的日子[h]就會從主面前來到;並且他要將耶穌,就是預先指定給你們的那位基督差來。 21 不過天必須留他,直到萬有復興的時候,就是神自古以來藉著聖先知們的口所說的那時候。 22 摩西確實[i]說過:

『主——你們的神,將要從你們兄弟中給你們興起一位先知,像興起我一樣。他對你們所說的一切,你們都要聽從。 23 所有不聽從那位先知的人[j],都要從民中被全然滅絕。』[k]

24 「其實從撒母耳以來所有的先知,只要說預言[l],都同樣地預告了這些日子。 25 你們是先知們的子孫,也是神與你們[m]祖先所訂立之約的子孫。那時神對亞伯拉罕說:『藉著你的那位後裔,地上萬族都要蒙祝福。』[n] 26 神興起了他的僕人[o],差派他先到你們這裡來,要你們每個人轉離自己的罪行,好祝福你們。」

Footnotes

  1. 使徒行傳 3:1 下午三點——原文為「第九時刻」。
  2. 使徒行傳 3:2 生來——原文直譯「從母腹中」。
  3. 使徒行傳 3:6 有古抄本沒有「起來」。
  4. 使徒行傳 3:11 那個人——有古抄本作「那得了痊癒的瘸腿之人」。
  5. 使徒行傳 3:13 亞伯拉罕、以撒、雅各的神——原文直譯「亞伯拉罕的神、以撒的神、雅各的神」。
  6. 使徒行傳 3:15 創始者——或譯作「本源」或「元首」。
  7. 使徒行傳 3:17 同胞們——原文直譯「兄弟們」。
  8. 使徒行傳 3:20 更新的日子——或譯作「安舒的日子」。
  9. 使徒行傳 3:22 有古抄本附「對祖先」。
  10. 使徒行傳 3:23 人——原文直譯「靈魂」。
  11. 使徒行傳 3:23 《申命記》18:15-19。
  12. 使徒行傳 3:24 說預言——原文直譯「說話」。
  13. 使徒行傳 3:25 你們——有古抄本作「我們」。
  14. 使徒行傳 3:25 《創世記》12:3;22:18;26:4;28:14。
  15. 使徒行傳 3:26 有古抄本附「耶穌」。

ஊனமுற்ற மனிதனின் சுகம்

ஒருநாள் பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். பிற்பகல் மூன்று மணியாகி இருந்தது. அது தினமும் தேவாலயத்தில் பிரார்த்தனை நேரமாகும். அவர்கள் தேவாலயத்தின் முற்றத்தில் போய்கொண்டிருக்கும்போது, ஒரு மனிதன் அங்கிருந்தான். அவன் பிறந்தது முதல் ஊனமுற்றவனாக இருந்தான். அவனால் நடக்க முடியாததால் அவனது நண்பர்கள் சிலர் அவனைச் சுமந்து வந்தனர். அவனது நண்பர்கள் ஒவ்வொரு நாளும் அவனை தேவாலயத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் ஊனமுற்ற மனிதனை தேவாலயத்துக்கு வெளியே ஒரு பெருங்கதவின் அருகே உட்கார வைத்தனர். அது அலங்கார வாசல் என அழைக்கப்பட்டது. தேவாலயத்துக்குள் போகும் அனைவரிடமும் அம்மனிதன் பணத்திற்காகப் பிச்சை கேட்டான். அன்றையத்தினம் அம்மனிதன் பேதுருவும், யோவானும் தேவாலயத்துக்குள் போய்க்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம் பணத்திற்காக வேண்டினான்.

பேதுருவும் யோவானும் ஊனமுற்ற அம்மனிதனை நோக்கி, “எங்களைப் பார்” என்றனர். அம்மனிதன் அவர்களைப் பார்த்தான். அவர்கள் ஏதேனும் கொஞ்சம் பணம் கொடுப்பார்களென அவன் எதிர்பார்த்தான். ஆனால் பேதுரு, “என்னிடம் வெள்ளியோ, பொன்னோ கிடையாது, ஆனால் உனக்குக் கொடுக்கக்கூடிய வேறு பொருள் என்னிடம் உள்ளது. நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் எழுந்து நட!” என்று கூறினான்.

பின் பேதுரு அம்மனிதனின் வலது கையைப் பிடித்து அவனைத் தூக்கினான். உடனே அம்மனிதனின் பாதங்களும் கால்களும் பலம் பெற்றன. அம்மனிதன் குதித்தெழுந்து, அவனது பாதங்களில் நின்று, நடக்க ஆரம்பித்தான். அவன் அவர்களோடு தேவாலயத்துக்குள் சென்றான். அம்மனிதன் நடந்துகொண்டும், குதித்துக்கொண்டும் தேவனை வாழ்த்தியவனாக இருந்தான். 9-10 எல்லா மக்களும் அவனை அடையாளம் கண்டுகொண்டனர். எப்போதும் அலங்கார வாசல் அருகே அமர்ந்து பணத்திற்காகப் பிச்சை கேட்கும் ஊனமுற்ற மனிதனே அவன் என்று மக்கள் அறிந்தனர். இப்போது அதே மனிதன் நடந்துகொண்டிருப்பதையும் தேவனை வாழ்த்திக்கொண்டிருப்பதையும் அவர்கள் கண்டார்கள். மக்கள் ஆச்சரியமடைந்தார்கள். எவ்வாறு இது நடக்கக் கூடுமென்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பேதுருவின் பிரசங்கம்

11 அம்மனிதன் பேதுருவோடும் யோவானோடும் சேர்ந்துகொண்டிருந்தான். அம்மனிதன் நலம் பெற்றதையறிந்து எல்லா மக்களும் ஆச்சரியம் கொண்டனர். சாலமோனின் மண்டபத்தில் பேதுருவிடமும் யோவானிடமும் அவர்கள் ஓடிச் சென்றனர்.

12 இதைக் கண்டதும் பேதுரு, மக்களை நோக்கி, “எனது யூத சகோதரர்களே, நீங்கள் ஏன் இதைக் கண்டு ஆச்சரியப்படுகிறீர்கள்? இம்மனிதனை எங்களது வல்லமையால் நடக்கும்படியாகச் செய்தோம் என்பது போல் நீங்கள் எங்களைப் பார்க்கிறீர்கள். நாங்கள் நல்லவர்களாக இருப்பதால் இதைச் செய்ய முடிந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 13 இல்லை! தேவன் இதைச் செய்தார்! அவர் ‘ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனும்’ ஆனவர். அவரே நமது முன்னோர்களின் தேவன். அவர் தனது விசேஷ ஊழியரான இயேசுவுக்கு மகிமையை அளித்தார். ஆனால் நீங்களோ இயேசுவைக் கொல்லும்படியாகக் கொடுத்தீர்கள். பிலாத்து இயேசுவுக்கு விடுதலையளிக்க முடிவு செய்தான். ஆனால் உங்களுக்கு இயேசு வேண்டாதவரென நீங்கள் பிலாத்துவுக்குக் கூறினீர்கள். 14 இயேசு தூயவராகவும் நல்லவராகவும் இருந்தார். ஆனால் நீங்கள் அவர் தேவையில்லையெனக் கூறினீர்கள். இயேசுவுக்குப் பதிலாக ஒரு கொலையாளியை[a] உங்களுக்குத் தரும்படியாக நீங்கள் பிலாத்துவை வேண்டினீர்கள். 15 உயிரளிக்கிறவரை நீங்கள் கொன்றீர்கள். ஆனால் தேவனோ அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். நாங்கள் இதற்கு சாட்சிகள். எங்கள் கண்களாலேயே இதைக் கண்டோம்.

16 “இயேசுவின் வல்லமையே ஊனமுற்ற மனிதனை நன்றாக நடக்கும்படிச் செய்தது. இயேசுவின் வல்லமையில் நாங்கள் நம்பிக்கை வைத்ததால் இது நிகழ்ந்தது. நீங்கள் இம்மனிதனைப் பார்க்க முடிகிறது. உங்களுக்கு இவனைத் தெரியும். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையால் அவன் முழுக்கக் குணமடைந்தான். அது நிகழ்ந்ததை நீங்கள் எல்லாரும் கண்டீர்கள்.

17 “எனது சகோதரர்களே, நீங்கள் செய்வதை அறியாததால் அவற்றை இயேசுவுக்குச் செய்தீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் தலைவர்களும் அதைப் புரிந்துகொள்ளவில்லை. 18 இக்காரியங்கள் நடந்தேறுமென தேவன் கூறினார். அவரது கிறிஸ்து துன்புற்று இறப்பார் என்பதை தேவன் தம் தீர்க்கதரிசிகள் மூலமாகக் கூறினார். தேவன் இதை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை உங்களுக்குக் கூறியுள்ளேன். 19 எனவே நீங்கள் உங்கள் இருதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள்! தேவனிடம் திரும்புங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பார். 20 பின் ஆண்டவர் உங்களுக்கு ஆவிக்குரிய இளைப்பாறுதலை நல்குவார். கிறிஸ்துவாக இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய இயேசுவை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.

21 “ஆனால் எல்லாக் காரியங்களும் மீண்டும் சரியாகும் வரை இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும். பல்லாண்டுகளுக்கு முன்னரே தேவன் தனது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசியபோதே, இவற்றைப்பற்றிக் கூறியுள்ளார். 22 மோசே, ‘கர்த்தராகிய உங்கள் தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அளிப்பார். உங்கள் சொந்த மக்களிடையேயிருந்து அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார். அவர் என்னைப் போலவே இருப்பார். அத்தீர்க்கதரிசி உங்களுக்குக் கூறுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். 23 எந்த மனிதனாகிலும் அந்தத் தீர்க்கதரிசிக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அப்போது அம்மனிதன் தேவனுடைய மக்களிடமிருந்து பிரிந்து இறப்பான்’”(A) என்றான்.

24 “தேவனுக்காகப் பேசிய சாமுவேலும் அவருக்குப் பின் வந்த மற்ற எல்லாத் தீர்க்கதரிசிகளும் இக்காலத்தைக் குறித்துப் பேசினார்கள். 25 தீர்க்கதரிசிகள் பேசிய அனைத்தையும் நீங்கள் பெற்றீர்கள். அதைப் போலவே தேவன் உங்கள் முன்னோரோடு செய்த உடன்படிக்கையையும் நீங்கள் பெற்றீர்கள். தேவன் உங்கள் தந்தையாகிய ஆபிரகாமிடம், ‘உன் தலைமுறையினரால் உலகின் ஒவ்வொரு தேசமும் ஆசீர்வதிக்கப்படும்’(B) என்று கூறினார். 26 தேவன் தனது விசேஷ ஊழியரை அனுப்பியுள்ளார். தேவன் அவரை முதலாவதாக உங்களிடம் அனுப்பினார். உங்களை ஆசீர்வதிப்பதற்கு தேவன் இயேசுவை அனுப்பினார். நீங்கள் ஒவ்வொருவரும் தீய செயல்களைச் செய்கிறதிலிருந்து உங்களைத் திருப்புவதின் மூலம் தேவன் இதைச் செய்கிறார்” என்றான்.

Footnotes

  1. அப்போஸ்தலர் 3:14 கொலையாளி பரபாஸ், பிலாத்துவிடம் யூதர்கள் இயேசுவுக்குப் பதிலாக இவனையே விடுதலைசெய்யும்படிக் கூறினர். லூக்கா 23:19 பார்க்க.